பிழையாயிரம் யான் இழைத்தாலும் தயை

பிழையாயிரம் யான் இழைத்தாலும் தயை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

தேடிய திருவடி - இராக மாலிகை

இராகம்: முகாரி

 

பல்லவி

 

          பிழையாயிரம் யான் இழைத்தாலும் தயை

            பிழையாது எனை விழையும் பேரன்பே

                        பேரன்பே (பேரன்பே) பேரன்பே.

 

அனுபல்லவி

 

                        தவம் ஏதும் அறியேன் ஆனாலும் பெரும்

                        தயை உனது இயல்பு என்பதறிவேனே

 

                                    பேரன்பே (பேரன்பே) பேரன்பே.

 

சரணங்கள்

 

1.         ஆண்டகை வாழின்ப வீடயர்ந்தேன் - தப்பி

            அல்லோடு நாடளோட நாடோடினேன்.

            ஆண்டு பல்லாண்டுகள் தாண்டிச் சென்றேன் அவை

            அடர் வளை முகடுகள் பல கடந்தேன்.

 

(இராகம்: சிந்து பைரவி)

 

2.         தளையுண்ட உள்ளந்தனை பணயம் வைத்தேன் - அந்த

            தலைவனின் பொருள் அதை விலை பகர்ந்தேன்

            துளையுண்ட திருவடி தொடர்ந்து வர நாயேன்

            தோண்டிய பவக்குழி தனில் ஒளிந்தேன்.

 

(இராகம்: குந்தலவராளி)

 

3.         திம் தகி திம்மென தினம் தினமே அண்ணல்

            தேடிய திருவடி தொடர்ந்தொலிக்கும்

            நிம்மதி ஏதுனக்கு? ஏது நிறைவென்றும்

            நிலை புகல் ஏதுனக்கு என்னையல்லால்?

 

(இராகம்: பேஹாக்)

 

4.         பற்றிடு என் கரந்தனை பயமின்றி

            புறப்படு என புரவலன் பகர்ந்தக்கால்

            சுற்றிய மாய துயிலகல கண்கள்

            சூரிய விடிவென புலர்ந்தனவே.

 

(இராகம்: காப்பி)

 

5.         நீட்டிய கரங்களில் மாட்டிக் கொண்டேன்

            செந்நீரினில் மூழ்கினேன் தூய்மையுண்டேன்

            காட்டிய திரு நெஞ்சில் தலை சாய்த்தேன் அண்ணல்

            கருணைக் கடலதனில் பாய் விரித்தேன்

 

                        பேரன்பே பேரன்பே பேரன்பே

 

 


இப்பாடலின் கருத்து:

ஒரு வேட்டை நாய் தனது இரையைத் தொடர்ந்து பிடிப்பது போல,

தேவன் தம்மை விட்டு விலகி ஓடும் தம் பிள்ளையைத் தொடர்ந்து வருகிறார்.

தயவும், அன்பும், இரக்கமும் மிக்கவராய் அவனைத் தேடி வருகிறார்.

நீட்டிய கரங்களில் அவன் மாட்டிக் கொள்ளும் வரை,

காட்டிய திருநெஞ்சில் தன் தலையைச் சாய்க்கும் வரை,

அவரது துளையுண்ட திருவடிகள் அவனைத் தொடர்கின்றன.

இதோ, தேடிய திருவடிகளின் சத்தம் உங்கள் காதுகளில் தொனிக்கட்டும்.

அந்த பேரன்பில் உங்கள் உள்ளங்களும் திளைக்கட்டும்.

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு