எந்த நன்மையும் என்னில் இல்லையே

எந்த நன்மையும் என்னில் இல்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   எந்த நன்மையும் என்னில் இல்லையே

                   தேவா என்னையும் நீர் நேசிக்க

                        எந்த மேன்மையும் என்னில் இல்லையே

                        தேவா என்னையும் நீர் நினைக்க

 

1.         அழகுமில்லை ஆஸ்தியுமில்லை

            ஆனாலும் என்னை நீர் அழைத்தீர்

            படிப்புமில்லை பட்டமுமில்லை

            ஆனாலும் என்னை நீர் பிடித்துக் கொண்டீர்

 

                        உந்தன் அன்பு உயர்ந்ததைய்யா

                        உந்தன் ஞானம் சிறந்ததைய்யா

 

2.         ஞானியுமல்ல மேதையுமல்ல

            பேதையாம் என்னை தேடி வந்தீர்

            பெலவான் அல்ல கனவானுமல்ல

            பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர்

 

                        உந்தன் அன்பு உயர்ந்ததைய்யா

                        உந்தன் ஞானம் சிறந்ததைய்யா

 

3.         ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே

            அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே

            வாழ்கின்ற வரையில் உம்புகழ் சொல்வேன்

            இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன்

 

                        உந்தன் அன்பை நான் மறவேன்

                        எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்     

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு