09 February 2023

ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம்

பே.கீ.99

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

99. பாலர் பண்டிகை

 

                             பல்லவி

 

          ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம்

            பாலரே நாம்

 

                             அனுபல்லவி

 

                        ஆசரிப்போம் - பாலரே நாம்

                        ஆர்ப்பரித் தகங்களிப்போம்

                        அன்புடன் ஆலயத்தில் அம்பரனையே துதிப்போம் - ஆனந்த

 

                             சரணங்கள்

 

1.         இயேசுவின் ரத்தத்தாலே நாம்

            மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம்

            மீட்கப்பட்டோம் காக்கப்பட்டோம்

            மீட்டுமுடி சூட்டப்பெற்றோம்

            மீட்பரால் சங்கமதின் அங்கங்களாய்க் கூட்டப்பட்டோம் - ஆனந்த

 

2.         பாலர் இச்சங்கத்தாலே -பகவானருள்வரமே பெற்றோம்

            பகவானருள் வரமே பெற்றோம்

            பரிசுத்தமெய் -வேதம் கற்றோம்

            பாரினில் பாலனான -பரன்சுதன் நல்நேசர் கண்டோம் - ஆனந்த

 

3.         செல்லுவோம் நேயர்களே சிலுவைக்கொடி கரம் படித்து

            சிலுவைக்கொடி கரம் பிடித்து

            வலுசெய்பேயின் - சிரமுடைத்து

            வல்லமை நாதன் நாம - வாழ்த்துதல் கீதம் படித்து - ஆனந்த

 

4.         எண்ணடங்கா நன்மைகள் - எந்தை தந்தார் சந்ததமே

            எந்தை தந்தார் - சந்ததமே

            என்றும் துதி - வந்தனமே

            இன்றும் ஆசீர் பெறுவோம் - ஏக சகோதரரே வாரும் - ஆனந்த

 

5.         உள்ளக் கருத்துடனே - ஒருமித்த பாசத்துடனே

            ஒருமித்த -பாசத்துடனே

            உற்சாக - மனதுடனே

            உன்னதனார் சமூகம் - உவந்து காணிக்கை படைத்து - ஆனந்த

 

6.         பெற்ற தாய் தந்தையாரும் - உற்ற பெந்து சோதரரும்

            உற்றபெந்து - சோதரரும்

            கற்றோர் மற்றோர் போதகரும்

            குற்றமென் றுரைத்திடும் துர்க்குணம் நீங்க

            சற்குருவை வேண்டி - ஆனந்த

 

7.         பாலியர் சங்கமென்றும் - பக்தியுற முத்திபெற

            பக்தியுற - முத்தி பெற

            நித்தியமாய் - தூதர் சூழ

            அத்தனை சுத்தரென்று - ஆராதிக்கும்

            அருளே பெற - ஆனந்த

 

 

https://www.youtube.com/watch?v=yWmtGpW1Ayo

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...