20 October 2020

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

நிஜீ.கீதங்கள்:556

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அதிகாலையில் உம் திருமுகம் தேடி

            அர்ப்பணித்தேன் என்னையே

            ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்

            அப்பனே உமக்குத் தந்தேன்

 

                        ஆராதனை ஆராதனை (2)

                        அன்பர் இயேசு ராஜனுக்கே

                        ஆவியான தேவனுக்கே

 

1.         இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்

            உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்

            என் வாயின் வார்த்தை எல்லாம்

            பிறர் காயம் ஆற்ற வேண்டும்

 

2.         உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்

            என் இதயத் துடிப்பாக மாற்றும்

            என் ஜீவ நாட்கள் எல்லாம்

            ஜெப வீரன் என்று எழுதும்

 

3.         சுவிசேஷ பாரம் ஒன்றே

            என் சுமையாக மாற வேண்டும்

            என் தேச எல்லையெங்கும்

            உம் நாமம் சொல்ல வேண்டும்

 

4.         உமக்குகந்த தூய பலியாய் - இந்த

            உடலை ஒப்புக் கொடுத்தேன்

            ஆட்கொண்டு என்னை நடத்தும்

            அபிஷேகத்தாலே நிரப்பும்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...