23 December 2022

இராஜாதி ராஜன் தேவாதி தேவன் மானிடரானாரே

இராஜாதி ராஜன் தேவாதி தேவன் மானிடரானாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                இராஜாதி ராஜன் தேவாதி தேவன்

                மானிடரானாரே

                லோகத்தின் பாவம் போக்கிடவே

                மைந்தராம் எம்மை காத்திடவே

 

1.      வேதத்தின் வார்த்தைகள் நிறைவேறிட

        தேவனின் திருச்சித்தம் நிறைவேற

        மன்னவனானவர் மண்ணில் வந்தார்

        உன்னையும் என்னையும் மீட்க வந்தார் - இராஜாதி

 

2.      மன்னாதி மன்னவர் ஏழை ஆனார்

        விண்ணின் மேன்மை அவர் துறந்தார்

        மனிதனின் பாவம் முற்றும் சுமந்தார்

        சிலுவையில் தன்னை பலியாக்கினார்    - இராஜாதி

 

3.      வருகிறார் அவர் மறுபடியும்

        வேத வாக்குகள் நிறைவேற

        உலகை நியாயம் தீர்த்திடவே

        விண்ணின் வாழ்வை நமக்களிக்க       - இராஜாதி

 

4.     இயேசுவே என்னில் வந்திடுமே

        எந்தன் இதயம் உமக்காக

        தருகிறோம் உம் கரங்களிலே

        இன்பம் அமைதி தந்திடுமே                 - இராஜாதி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...