ஆரீரோ
ஆரீரோ ஆரீரோ பாலா
ஆரீரோ பாலகனே - 2
அற்புத பாலகனே - 4
1. சிந்தை குளிர்ந்தவனாய் கந்தை அணிந்தவனாய்
விந்தை நல் பாலகனாய் வந்தீரிப் பாரினிலே
கண்ணுறங்காய் விண்ணவனே
கன்னிமரி மடியிலே
2. கண்ணே கண்வளராய் விண்ணவர் கோமகனே
பொன்னே மாணிக்கமே மண்ணிலே மணிவிளக்கே
கண்ணுறங்காய் விண்ணவனே
கன்னிமரி மடியிலே
https://www.youtube.com/watch?v=KAQII2zWjiM
No comments:
Post a Comment