09 December 2022

மின்மினி கூட்டம் நீந்தும் வானில் தூதர் பாடினாரே

மின்மினி கூட்டம் நீந்தும் வானில் தூதர் பாடினாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          மின்மினி கூட்டம் நீந்தும் வானில் தூதர் பாடினாரே

            கண்மணி இயேசு மண்ணில் வந்த செய்தி கூறினாரே

 

                        இன்று தாவீதூரிலே தொழுவிலே மேசியா பிறந்தார்

                        மண்ணில் பாவசாபங்கள் நீக்கவே இரட்சகர் பிறந்தார்

                        உலகெங்கெங்கும் சந்தோசமே உலகெங்கெங்கும் சமாதானமே

 

1.         கண்மணி போல காத்திடும் தேவன் கண்மணியானாராம்

            மானிடர் பாவம் போக்கிடும் தேவன் மானிடனாராம் - இன்று

 

2.         பாலரை ஆசீர்வதிக்கும் தேவன் பாலகனானாராம்

            படைப்புகளெல்லாம் போற்றும் தேவன் படைப்பாய் வந்தாராம் - இன்று

 

3.         தாழ்மையை உலகில் போதிக்கும் தேவன் தாழ்மையானாராம்

            தரணியை தனக்காய் மாற்ற நினைத்து தரணியில் பிறந்தாராம் - இன்று

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...