20 December 2022

பனி விழும் இரவினில் மாடடை குடிலினில்

பனி விழும் இரவினில் மாடடை குடிலினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   பனி விழும் இரவினில் மாடடை குடிலினில்

                        விண்தூதர் கூட்டம் ஒன்று நற்செய்தியைக் கூறினாரே

                        இம்மானுவேலர் பிறந்த செய்தி கேட்ட ஆயர்

                        கந்தை பொதிந்தவராய் மன்னவரைக் கண்டனரே

 

1.         ஏசாயா தீர்க்கன் உரைத்த வார்த்தையின் படியே

            முன்னோர்கள் எதிர்பார்த்த மேசியா இவரே

            யூதாவின் கோத்திரத்தின் செங்கோலும் இவரே

            தாவீதின் வம்சத்தில் வந்தவரும் இவரே

 

                        சாரோனின் ரோஜா இவர்

                        பள்ளத்தாக்கின் லீலியும் இவர்

                        கனிதரும் விருட்சங்களில்

                        திராட்சைக் கொடியின் கனிகள் இவர்

 

                        இரட்சிப்பின் வழியில் 

                        அனுதினமும் நடத்துபவர்

                        நியாயத் தீர்ப்பின் நாளில்

                        நம்மை பரலோகில் சேர்ப்பாரவர்

 

2.         ஆதியும் அந்தமுமாய் அமைந்தவர் இவரே

            அல்பாவும் ஒமேகாவுமாய் ஆனவர் இவரே

            அதிசயம் அற்புதம் நிறைந்தவர் இவரே

            அன்பின் உருவமாய் உதித்தவர் இவரே

 

                        ஒருவரும் சேரக்கூடா

                        ஒளியில் வாசம் செய்பவர்

                        இம்மானுவேலனாக

                        நம்மில் இன்று வந்தவர்

 

                        இரட்சிப்பின் வழியில் 

                        அனுதினமும் நடத்துபவர்

                        நியாயத் தீர்ப்பின் நாளில்

                        நம்மை பரலோகில் சேர்ப்பாரவர்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...