21 December 2022

பெத்லகேம் என்னும் ஊரில்

பெத்லகேம் என்னும் ஊரில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          பெத்லகேம் என்னும் ஊரில்

            மாட்டுத் தொழுவமதனில்

            தேவக்குமாரன் பாரொளி வேந்தன்

            பாலனாய் அவதரித்தார்

 

                        பிறந்தார் பிறந்தார்

                        இயேசு பாலன் பிறந்தார்

                        உதித்தார் உதித்தார்

                        உலகை மீட்க உதித்தார்

 

1.         முன்னொரு நாள் முதலாம் ஆதாம்

            பாவத்தில் விழுந்தான் - 2

            வீழ்ந்ததினால் சாபம் பெற்று

            தேவ அன்பை இழந்தான்

                        மானுடம் மீட்பு பெற

                        தேவ சாயல் திரும்ப பெற-2

            இன்றைய நாளில் இரண்டாம் ஆதாமாய்

            மேசியா தோன்றினார் - 2 - பிறந்தார்

 

2.         சத்திரத்தில் இடம் இல்லாமல்

            முன்னணையில் தவழ்ந்தார் - 2

            இதயத்தில் இடம் உண்டோ

            உன்னிடம் கேட்கிறார்

                        பாவம் போக்கிடுவார்

                        உன் சூழ்நிலை மாற்றிடுவார் - 2

            உனக்காக அவதரித்தார்

            இதயம் தருவாயா - 2 - பிறந்தார்

 

 

 

 

 

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...