பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆட

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பார் எங்கும் மகிழ்ந்து ஆட

          விண் தூதர் இசைந்து பாட - 2

 

                    சின்னஞ்சிறு பாலகனாய்

                    மண்ணில் வந்த மன்னவனாம்

                    அன்னைமரி பாலகனை போற்றிடுவோம் - 2

                    விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற

                    தேவ மைந்தன் இன்று பிறந்தார் - 2

 

1.       மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே

          பாலகனை காண அவர் சென்றனரே - 2

          கந்தை துணி கோலமாக

          முன்னனையின் மீதினிலே

          உலகத்தின் இரட்சகரை தொழுதனரே - 2

 

                    சின்னஞ்சிறு பாலகனாய்

                    மண்ணில் வந்த மன்னவனாம்

                    அன்னைமரி பாலகனை போற்றிடுவோம்

                   விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற

                   தேவ மைந்தன் இன்று பிறந்தார்

 

2.       வானில் புது விடிவெள்ளி தோன்றியதே

          தேவ மகன் பிறப்பினை கூறியதே - 2

          ஞானிகளும் பின்சென்று

          காணிக்கைகள் கொண்டு சென்று

          இயேசு பாலன் முன்பாக பணிந்தனரே - 2

 

                    சின்னஞ்சிறு பாலகனாய்

                    மண்ணில் வந்த மன்னவனாம்

                    அன்னைமரி பாலகனை போற்றிடுவோம்

                   விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற

                   தேவ மைந்தன் இன்று பிறந்தார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு