02 December 2022

கொண்டாடு துதி பாடு இயேசு பிறந்தார்

கொண்டாடு துதி பாடு இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          கொண்டாடு துதி பாடு இயேசு பிறந்தார்

            மகிழ்ச்சியோடு மன்னவனை துதித்து பாடிடு - 2

                        பாடுவோம் கொண்டாடுவோம்

                        பாலகனை போற்றிப் பாடுவோம் - 2

 

1.         உலகிற்கு ஒரே ஒரு இரட்சகராய்

            இரட்சிப்பை தந்திடவே பிறந்தாரே

            ஏழ்மையானவர் மனத் தாழ்மையுடையவர்

                        நம்மையே என்றென்றும்

                        நினைக்க வந்தவர்

            பாடுவோம் கொண்டாடுவோம்

            பாலகனை போற்றி பாடுவோம்

 

2.         அன்னை மரி மடியினிலே தவழ்ந்தாரே

            கண்ணின் மணி போல் நம்மை காத்திடவே

                        மேய்ப்பர் ஆனவர் நம்மை ஆள வந்தவர்

                        நம்மையே காக்க வந்த தெய்வமானவர்

            பாடுவோம் கொண்டாடுவோம்

            பாலகனை போற்றி பாடுவோம்

 

3.         ஒளி வீசும் சுடரொளியாய் உதித்தாரே

            உலகிற்கு பேரொளியை காண்பிக்கவே

                        அதிசயமான ஒளியுமானவர் - 2

                        நம்மையே மீட்க வந்த மீட்பரானவர் -2

             பாடுவோம் கொண்டாடுவோம்

            பாலகனை போற்றிப் பாடுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...