02 December 2022

கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் நமக்காக

            இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் நமக்காக

            நம்மை மீட்க வந்த மீட்பர் அவரே

            நம்மை இரட்சிக்க வந்த இரட்சகர் அவரே

                        Happy Happy Christmas

                        Merry Merry Christmas

 

1.         சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்திடவே

            துயரத்திற்கு பதிலாக ஆனந்தத்தை தந்திடவே

            அதிசயமானவராய் ஆலோசனை கர்த்தராய்

            வல்லமையின் தேவன் பிறந்திட்டார்

            நித்திய பிதா அவர் சமாதான பிரபு அவர்

            ஆளும் ராஜன் பிறந்திட்டார்

                        மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் - நமக்காய்

                        இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார்

            Happy Happy Christmas

            Merry Merry Christmas

 

2.         இருளில் வாழும் ஜனங்களுக்கு வெளிச்சத்தை தந்திடவே

            ஒவ்வொரு முகத்தில் உள்ள கண்ணீரை துடைக்கவே

            நீதியின் சூரியனாய் பிரகாசிக்கும் நட்சத்திரமாய்

            ஜொலிக்கும் தேவன் பிறந்திட்டார்

            வார்த்தை தேவனாக தேவன் ஜீவனாக

            ஜீவனுக்குள் ஒளியும் வந்ததே

                        மேசியா கிறிஸ்து பிறந்திட்டார் - நமக்காய்

                        இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார்

            Happy Happy Christmas

            Merry Merry Christmas

 

3.         சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க

            நொறுங்குண்ட ஜனங்களுக்கு காயங்களை கட்டிட

            அன்பான தேவனாக ஆரூயிர் நண்பனாக

            ஆச்சர்ய தேவன் பிறந்திட்டார்

            உன்னதமானவர் மகிமையின் தேவனவர்

            மனிதனாய் அவதரித்தாரே

                        மேசியா கிறிஸ்து பிறந்திட்டார்-  நமக்காய்

                        இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார்

            Happy Happy Christmas

            Merry Merry Christmas

 

4.         சிறைப்பட்ட ஜனங்களுக்கு விடுதலையை அளித்திட

            கட்டப்பட்ட ஜனங்களுக்கு கட்டுகளை அவிழ்த்திட

            நம்பிக்கை அற்ற வாழ்வில் நம்பிக்கை துளிர்த்திட

            தேவப் பாலன் பிறந்திட்டார்

            சாலோனின் ரோஜாவாக லீலியின் புஷ்பமாய்

            நமக்காய் புத்துவிட்டாரே

                        மேசியா கிறிஸ்து பிறந்திட்டார்

                        நமக்காய் இம்மானுவேல் தேவன் பிறந்திட்டார்

            Happy Happy Christmas

            Merry Merry Christmas

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...