நான் ஒரு பாவி நான் ஒரு பாவி


நான் ஒரு பாவி

          நான் ஒரு பாவி நான் ஒரு பாவி

            நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்

            நான் ஒரு பாவி நான் ஒரு பாவி

            நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்

 

1.         பாவத்தில் பாவத்தில் நான் விழுந்துவிட்டேன்

            என்னை நான் என்னை நான் வெறுத்துவிட்டேன்

            பாவத்தில் பாவத்தில் நான் விழுந்துவிட்டேன்

            என்னை நான் என்னை நான் வெறுத்துவிட்டேன்

            உமது ஆலோசனை பாரம் என்றேன்

            உம்மை நான் தள்ளிவிட்டு

            தூரம் சென்றேன்

 

2.         சந்தர்ப்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்

            பாவம் செய்த பின்னாலே பழிசுமத்தி

            தூண்டி விட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்

            மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி

 

            நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன்

            என்னை ரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்

            குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமும் இல்லை

            என்னில் நல்லதோர் குணமும் இல்லை

 

3.         எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்

            வேஷம் போட்டு திரிவதால் தெரிவதில்லை

            சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஒரு வாழ்க்கை

            மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை

            கட்டளை மீறுகின்றேன் அனுதினமும்

            ஒரு கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்

            என்னை போல் பாவி இந்த உலகில் உண்டா

            எனக்கு மன்னிப்பு உண்டா

 

            மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்

            மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்

            மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்

            மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்

            புதிய இதயத்தை கொடுத்திடுவேன்

            பாவனைகள் நீங்க உன்னை கழுவிடுவேன்

            புதிய இதயத்தை கொடுத்திடுவேன்

            பாவனைகள் நீங்க உன்னை கழுவிடுவேன்

            எனது ஆவியினால் நிரப்பிடுவேன்

            உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்


            Naan oru paavi naan oru paavi

            Naan seitha paavangkal pallaayiram

            Naan oru paavi naan oru paavi

            Naan seitha paavaththukku naan kaaranam

 

1.         Paavathil paavathil naan vizhunthuvitdaen

            Ennai naan ennai naan veruththuvitdaen

            Paavathil paavathil naan vizhunhthuvitdaen

            Ennai naan ennai naan veruththuvitdaen

            Umathu aaloasanai paaram entraen

            Ummai naan thallivitdu

            Thooram sentraen

 

2.         Santharppangkal enrum soozhnelaikal endrum

            Paavam seitha pinnaalae pazhisumaththi

            Thoondi vitdaar enrum maatrivitdaar endrum

            Matravarai enhaalum kutrappaduthi

 

            Naan seitha paavaththukku neyaayangkal sonnaen

            Ennai ratsiththa thaevanidam kaaranam sonnaen

            Kutrangkal oppukkollum manamum illai

            Ennil nallathoar kunamum illai

 

3.         Ennangkalukkullae ekkachsakka paavam

            Vaesham poatdu thirivathal therivathillai

            Sollil oru vaazhkkai sollaamal oru vaazhkkai

            Matravarkal enthan nelai arivathillai

            Katdalai meerukintraen anuthinamum

            Oru kallaippoal maarinathu enhthan manamum

            Ennai poal paavi intha ulakil undaa

            Enakku mannippu undaa

 

            Mannikkaththanae mannukku vanthaen

            Mantradum unnai en makanaakkinaen

            Mannikkathanae mannukku vanthaen

            Mantradum unnai en makalaakkinaen

            Puthiya ithayathai koduththiduvaen

            Paavanaikal neengka unnai kazhuviduvaen

            Puthiya ithayaththai koduththiduvaen

            Paavanaikal neengka unnai kazhuviduvaen

            Enathu aaviyinaal nerappiduvaen

            Unnai naan ennoadu saerththukkolvaen

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு