உன்னதனே தூயா சுத்தஅங்க சபையை

உன்னதனே தூயா சுத்தஅங்க சபையை
உற்றுக் கண் பாருமையா எம் சேகரத்தை
உற்றுக் கண் பாருமையா

 1. உன்னை நரர்க்கென்றேண்ணி
    உருக்கம் நிறைந்த தேவா நீர் - 2
    தன்னயம் இல்லா எங்கள் 
    சுவாமியே என் யெகோவா - 2
    மன்னுருவாய் ஒரு கன்னியிலே
    இந்நிலம் உய்ய வந்தவரே - 2
    எந்த விதமான நன்மைகளும் வெகு
    நன்யைமாகத் தந்தவரே - 2

        தைத் தகுண திகுண தகும், தகுண திகுண தகும்,
        தகுண திகுண தகும், தகுண திகுண தகும்,
        தக்குப திக்குப தாங்கு சுபதப தாங்கு சுபதப
        தழங்கு தோம் என  - உன்னதனே

2. வேலி அடைக்கவில்லையோ - அதன் கிளைகள்
    வெட்டி எடுக்கவில்லையோ அதன் கிளைகள்
    வெட்டி எடுக்கவில்லையோ
    சோலை போல் மரங்களும்
    துரவும் காண்பீர்களோ - 2
    வேளை இது சமயம்
    வேண்டுதலுக்கிரங்கி - 2
    சுத்திலும் கொத்தி எருப்போட்டு 
    சுத்தாவி என்னும் மழைபொழிய - 2
    சுத்திகரித்தருள் புரிந்திடுவாயே
    சத்திய வழியைக் காத்திடுவாயே - 2 - தைத்தகுண

3. வந்தனம் தந்தோமே இப்போது நாங்கள்
    வல்லபரா உமக்கே இப்போது நாங்கள்
    வல்லபரா உமக்கே
        வந்து நின் ஆசீர் தந்து
        வழியைத் துலக்கிடுவாய் நீ
        இடுக்கமான வழியில்
        துலக்கமிகவே செல்ல
        சத்திய வழியைக் காட்டிடுவாய்
        சன்மார்க்க நெறியை ஊட்டிடுவாய்
        கண்ணே மணியே பொன்னே தேனே
        உம்மைப் போற்றிடும் சீமானே - தைத் தகுண

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே