அதிகாலை
வேளையிலே உம் பாதம்
அனுதினம் காத்திருப்போம்
- 2
காலை தோறும் உம் கிருபைகள்
என்றும்
புதியவைகள் - 2 என்றும் புதியவைகள்
1. ஸ்தோத்திர பலியிடும் மனிதரெல்லாம்
கர்த்தரை மகிமைப்படுத்திடுவார் - 2
ஸ்தோத்திரங்கள் தினம் பெருகிடும் போது
கிருபையும் பெருகிடுமே
என்றும் கிருபையும் பெருகிடுமே
2. மாமிச தேகம் உள்ள யாவும்
கர்த்தரை மகிமைப்படுத்திடுமே - 2
மரித்தோரும் மௌனத்தில்
இறங்கினவர்களும் கர்த்தரைத் துதியார்கள்
என்றும் கர்த்தரை துதியார்கள்
No comments:
Post a Comment