01 September 2020

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

நிஜீ.கீதங்கள்:2319

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

1.       அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

            அமைதலாய்க் காத்திருப்பேன்

            என் இயலாமை மௌனம் அறிவிக்க

            அவரை போலாவேன்

 

2.         வடதிசை வாழும் என் குடும்பம்

            உடன் என் நினைவில் கலந்து விடும்

            தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட

            வல்லமை தேவன் வெளிப்படுவார்

 

3.         இல்லாமையே நம் உண்மைநிலை

            ஈவது ஒன்றும் தியாகமல்ல

            அவர் செய்த உபகாரம் பிரதி உபகாரம்

            பெற்றிட என்றும் அற்பமல்ல

 

4.         இலட்சியத்தோடு அர்த்தமுள்ள

            பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்

            அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்

            ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

 

5.         சாதனையாளர் நாட்டம் சிதறி

            வேதனை வழி ஒரு போதும் செல்வதில்லை

            நிரந்தர நிறைவும் நீடித்த அர்ப்பணமும்

            வெற்றிக்கு நடத்தும் படி கட்டுகள்

 

6.         தனக்கென வாழ நினைவிலும் மறந்து

            மற்றவர் மீது நாட்டம் கொண்டால்

            சுவிசேஷம் தானாய் சிதறியே வேகம்

            சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

 

 

- Kingsly Arunodhayakumar

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...