02 December 2021

உலகினிலே அதிசயங்கள் ஆயிரம் இருந்தாலும்

உலகினிலே அதிசயங்கள் ஆயிரம் இருந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உலகினிலே அதிசயங்கள் ஆயிரம் இருந்தாலும்

                        இயேசுவின் பிறப்பு அதிசயம்-என்

                        இயேசுவின் பிறப்பு அதிசயம்

                                    வாருங்கள் கொண்டாடுவோம்

                                    பாடுங்கள் இராஜனை

 

1.         மாடடையில் மனிதன் பிறப்பதில்லை

            ஆனால் என் இயேசு பிறந்தாரே

            மனிதரை மீட்க மானிடனாய்

            இந்த மண்ணில் அவதரித்தார்

                        அதிசயம் அதிசயம் அதிசயமே

                        இயேசு பிறப்பு அதிசயமே

                        வாருங்கள் கொண்டாடுவோம்

                        பாடுங்கள் இராஜனை

 

2.         ஞானிகளுக்கு வழி காட்டிய

            அந்த தாரகை அதிசயமே

            ஞானிகள் மத்தியில் ஞானத்தை

            போதித்த இயேசு அதிசயமே

                        அதிசயம் அதிசயம் அதிசயமே

                        இயேசு பிறப்பு அதிசயமே

                        வாருங்கள் கொண்டாடுவோம்

                        பாடுங்கள் இராஜனை

 

3.         மனிதன் கடவுளை தேடுகிறான்

            ஆனால் நம்மை தேடி இயேசு வந்தார்

            பரிசுத்த இயேசு இரட்சகராய்

            பாவி நம்மை மீட்க மண்ணில் பிறந்தார்

                        அதிசயம் அதிசயம் அதிசயமே

                        இயேசு பிறப்பு அதிசயமே

                        வாருங்கள் கொண்டாடுவோம்

                        பாடுங்கள் இராஜனை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...