வந்தாச்சி வந்தாச்சி விடிவெள்ளி நட்சத்திரம்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வந்தாச்சி
வந்தாச்சி
விடிவெள்ளி
நட்சத்திரம்
கோமகனாய்
கோமகனாய்
பிறந்தாரு
பிறந்தாரு
நம்மை மீட்க
இறைமகனாய்
இறைமகனாய்
தாவீதின்
ஊரினில் பிறந்தாரு
இயேசு தாழ்மையின்
கோலமாய் உதித்தாரு
புவி ஆளும்
இறைமகன் பிறந்தாரு
இந்த பூலோகம்
மீட்கவே தாழ்மையாய்
வந்தாரு
கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
1. தீர்க்கன்
சொன்ன வார்த்தையாவும்
நிறைவேற
பிறந்தார் மரி மகவாய்
உலகை ஆளும்
கோமகனார்
பிறந்தாரே
தாழ்மையின்
பணிவாய்
வானில்
தேவதூதன் வந்து
நின்றார் மகிழ்வாய்
ஆடு மேய்ப்பர்
வந்து நின்றார்
பணிவாய்
நல்ல செய்தி
ஒன்று சொன்னார்
அந்த தூதனார்
மேய்ப்பர்
செய்தி கேட்டு
உள்ளம் மகிழ்ந்தார்
புல்லணையில்
அவர் தவழ்கின்றாரு
மனம் மகிழ்ந்திட
உள்ளம் நிறைந்திட
பணிவோம்
பாலனையே
கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
2. பாவம் போக்கும்
பாலகனாய்
யூதரின் ராஜாவாய் பிறந்தார்
மனுக்குலத்தின்
அதிபதியாய்
மகிமையின் ராஜாவாய் பிறந்தார்
பாடுபட்டு
மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுவார்
பாவம் போக்கிடவே
இரத்தம் சிந்துவார்
தாழ்வில்
வாழும் நம்மை மீட்கும்
நாதன் இவர்தான்
தாழ்மையாக
தன்னை தியாகம்
செய்குவார்
வா என்றுதான்
உன்னை அழைக்கிறாரு
மனம் மகிழ்ந்திட
உள்ளம் நிறைந்திட
ஏற்போமே
பாலகனையே
கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
- ஜெபராஜ்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment