01 December 2021

என் இயேசு பாலன் பிறந்தாரே

என் இயேசு பாலன் பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    என் இயேசு பாலன் பிறந்தாரே

                        எழிலோடு கண்கள் திறந்தாரே

                        பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்

                        மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2

 

1.         இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்

            அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் - 2

            உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்

            உன்னதரும் துள்ளி அசைந்தாரே - 2

 

2.         முன்னணையில் வைகோலே பஞ்சனையோ!

            குளிர்வாடை பாடியது தாலேலோ! - 2

            மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே

            சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - 2

 

3.         கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட

            மூவரசர் தேடிவந்து பதம் நாட - 2

            ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட

            ஆனந்த அற்புதர் வந்தாரே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...