விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
விண்ணில்
தோன்றிய தூதர்
மேய்ப்பர்க்கு
நற்செய்தி
அறிவித்திட
ஆதியில்
ஏற்றிய வாக்கியம்
நிறைவேற
ரட்சகர்
பிறந்தாரே
கிழக்கில்
தோன்றிய வெள்ளியோ
முன் செல்ல,
சாஸ்திரிகள்
பின் சென்றிட
இரவில்
பனியில் மாடடையும்
தொழுவில்
பெத்தலையில்
தவழ்ந்தாரே
மண்ணுயிர்க்காய்
தன்னுயிர்
வெறுத்து
இருளகற்றும்
இனனாய் உதித்தாரே
அவர்
பொன் பாதம் நாடி
பொற்கிரீடம்
சூடி
போற்றி
பாடி ஆடி கொண்டாடுவோம்
உன்னதத்தில்
மகிமை
பூமியிலே
சமாதானம்
மானிடர்
மேல் பிரியம் உண்டானதே -
2
1. பரமேற்றி
பாடும் பாராளும்
ராயனுக்கு
சத்திரத்தில்
இடம் இல்லையோ
வான் விட்டு
வந்த விண்ணின்
வேந்தர்க்கு
கொட்டில்
தான் புல்லணையோ
மானிடர்க்காய்
மண்ணில் மலர்ந்தாரே
ஒரு ஏழையாக இன்று
ஏழுந்தாரே
- 2
அவர் தலை
சாய்த்து துயிலவும்
அசைந்தாடி
தவழவும்
உன்னிலே
இடம் உண்டோ
எனை
மீட்க வந்தவர்க்கு
எந்தனின்
இதயமதில்
என்றுமே
இடமும் உண்டு
பாடிடுவேன்
தாலாட்டு
உறங்கிடுவார்
அதை கேட்டு
மகிழ்வேன்
நான் அதையும் பார்த்து
எந்தன்
நெஞ்சம் வந்திடுமே
எந்தன்
மனம் நிறைந்திடுமே
- விண்ணில்
தோன்றிய
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment