20 October 2020

அதிசய நாயகன் அற்புதம் செய்கிறார்

நிஜீ.கீதங்கள்:1846

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிசய நாயகன் அற்புதம் செய்கிறார்

                   அண்டினோர் வாழ்வினிலே

                        ஆ... என்ன ஆனந்தம் ஆ... என்ன ஆனந்தம்

 

1.         தண்ணீரைக் கடக்கும் போது என்னோடிருந்தாரே

            அக்கினியில் நடக்கும் போது வேகாமல் காத்தாரே

            இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்

            நன்றியாலே நானும் பாடுவேன்

 

2.         கோடி துதிகள் சொல்லி பாடு மனமே ஓசன்னா

            எந்நாளும் காத்து ஏந்தி தாங்கி வந்த நேசரை

            அடைக்கலம் தருபவர் அன்பால் அணைப்பவர்

            ஆவியோடே அனுதினம் பாடுவேன்

 

3.         கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து வந்த நேரத்தில்

            தாயாக நின்று எந்தன் இயேசு என்னை தேற்றினார்

            பரவசம் கொள்கிறேன் மறுரூபமாகுவேன்

            பாதி வானம் பறந்தே செல்கிறேன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

1.       அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலே

            என் தேவன் உறங்காதவர்

            என்று நான் அறிவேன்

            நான் குருவிகள் குரலைக் கேட்கையில்

            என் தேவனும் கேட்கிறார்

            என் பயம் அறிவார்

            கண்ணீர் காண்பார்

            அழுகையைத் துடைப்பார்

 

                        எனக்கொரு தேவன் உண்டு

                        அவர் என்னைக் காண்கின்றார்

                        அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்

                        எல் ரோயீ என்னைக் காணும் தேவனே

 

2.         மேகம் கடப்பதைக் காண்கையில்

            நான் மனதில் ஜெபிக்கின்றேன்

            இந்த உலகத்தின் மாயைகள்

            என்னை மேற்கொள்ள கூடாது

            நதிகள் புரள்வதைக் காண்கையில்

            நான் எதற்கும் அஞ்சிடேன்

            அவர் அன்பு என்றும் மாறாது

            என்றும் நமக்குண்டு

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...