கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஏகே

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஏ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஏ..கே

                        கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஏ..கே

 

            மண்மேல எல்லாருந்தான் சொந்தம் கொண்டாட

            பூபோல பூத்தாரய்யா பூமி மேலே

            இதயங்களெல்லாம் இன்னிசைப் பாட

            மண்ணெங்கும் சந்தோசந்தான் மகிழ்ந்தே ஆட

            விடியிறவேள பனித்துளி போல

            பரிசுத்த தேவன் வந்தார் பாவம் அஞ்சி ஓட

            வானத்து ஜோதி தந்தது செய்தி

            பாருக்கு நீதிச் சொல்ல பாலகன் வந்தார் தேடி

            ஊரெங்கும் கூடி வாழ்த்துக்கள் பாடி

            தவழ்ந்திடும் தங்கத்துக்கு தாலாட்டுப் பாடி

           

                        கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

                        புல்மடிமேலே கண்மணி வந்த நாளின் கொண்டாட்டம்

                        கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

                        மன்னவர் சின்னவர் வடிவில் வந்தார் என்றே கொண்டாட்டம்

 

1.         வானில் வெள்ளி பூத்தாட பறவைகளெல்லாம் கூத்தாட

            பனித்தூறல் ஒலிக்கூட பாடிப் பண்பாட

            ஆயர் கூட்டம் நின்றாட வனவரெல்லாம் வாழ்த்தோட

            வந்தாச்சி வந்தாச்சி இங்கே புகழ்பாட

            கானங்கள் பாடிங்க கூர் கூடி தானுங்க

            சின்னப் பொன்மணி இயேசுவை காண

            வந்தது பாருங்க

            ஒன்னாக சேருங்க நல்வாழ்த்துப் பாடுங்க

            விடுதலையள்ளி தந்திடும் வேந்தன் வருகைய தானங்க

            விடிவெள்ளி பரிசள்ளி வீசுது பாரு கொய் கொய் கொய்

            கொடி அள்ளி மாலையைக் கட்டி சூட்டுது பாரு ஏ ஏ..

            பால் பொங்கும் முகம் கொண்ட பாலனை பாருங்க

            பாரெங்கும் சந்தோசத்தின் கீதம் தானுங்க

                        - கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

 

2.         இருளும் இங்கே ஒளியாச்சி இன்பம் பொங்கி ஆறாச்சு

            புதுவெள்ளம் பாய்ந்தோட பூக்கள் பூத்தாச்சு

            தேவகுமாரன் வந்தாச்சு தேடியதெல்லாம் பொன்னாச்சு

            அன்புக்கு ஒரு பிள்ளை உலகம் கண்டாச்சு

            ஏழையின் சிரிப்பில இறைவனை காணத்தான்

            ஏழைத்தாய் வயிற்றுக்குள் அவதரிச்சாரு

            ஒன்றாக வாழத்தான் ஒரு செய்தி கூறத்தான்

            நம் மீட்பர் இந்நாளில் நம்மில் வந்தாரு

            எல்லோரும் சமமென்று எண்ணிட வேணும்... கோய் கோய் கோய் கோய்

            இல்லாரும் நல்வாழ்வை பெற்றிட வேணும்

            அன்பென்ற விருந்திங்கே சேர்ந்தே உண்டிடனும்

            தேவன் கால்பட்ட தேசத்தின் புனிதம் காத்திடனும்

                        - கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

           

           

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு