அடைக்கலம்
ஆண்டவரே - எங்கள்
அடைக்கலம் வேறில்லையே - எம்மை
படைத்துக் காத்து மீட்டுக்
கொண்டவர் பரம பிதா நீரே
1. பரம
சுதந்திரமே, எங்கள்
பாத்திரத்தின்
பாகமே - உன்றன்
கரமே
அருளும் வரமே கர்த்தாநின்
கிருபையின்
மாசெல்வமே - அடைக்
2. ஆலோசனைக்
கர்த்தரே எங்கள்
ஆவியான
தூயரே - இந்த
பூலோகத்தில்
போதம் அளித்திடும்
புனித சகாயர் நீரே - அடைக்
3. ஆறுதல்
அளிப்பவரே உம்மை
அண்டிப்பிழைப்போர்
எமை - சதா
ஆற்றித்
தேற்றி மாற்றி ஆட்கொண்டவர்
மாறாத
பூரணரே - அடைக்
4. ஆனந்தம்
ஆண்டவரே, அருளானந்தப்
பேரின்பமே
- சன்னி
தானமதிலே
அழகாய் விளங்குமாப்
பூரண
ஆனந்தமே - அடைக்
No comments:
Post a Comment