02 November 2021

ஆலயம் சென்றிடுவோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆலயம் சென்றிடுவோம் ஆண்டவனைத் தொழுவோம்

                        பணிந்து குனிந்து இறைவனை வணங்கிடவா

                        ஆலயம் போவோம் என்று அழைத்திட்ட அவ்வேளையில்

                        ஆழவும் மகிழ்ந்தது மனதுமே குளிர்ந்தது

 

1.         எத்தனை நாவால் நான் உம்மைப் பாடக்கூடுமோ

            அத்தனை நன்மைகளை தந்திட்டீரைய்யா

            ஆலயம்தன்னிலே நாம் பாடகரோடிணைந்து

            கர்த்தர் நல்லவர் என்று திடவாக்கியத்துடனே பாட

 

2.         ஆலயம் உம்முடைய வாசஸ்தலம் அல்லவோ

            பா நயத்துடன் பாட வாஞ்சிக்கிறேன்

            ஆலயம் சென்றுமே நான் ஆராய்ச்சி செய்யும்படி

            நில வாக்கியம் படும்வரை ஆலயம் தங்கிடுவேன்

 

3.         ஆயிரம் நாளைவிட உமது ஆலயம் சென்று

            பாயிரம் பாடிடும் நாள் உயர்ந்ததன்றோ

            ஆகாமியக் கூடாரத்தில் தங்கி இருப்பதிலும்

            சகாயம் சஞ்சரித்திடும் ஆலயம் செல்லும் இன்பம்

 

4.         சபை கூடி வருதலை சிலர் விட்டுவிடுதல்போல்

            அவையோரே நீவீரும் விட்டிட வேண்டாம்

            இறை இயேசு ஆலயத்தில் இதயத்தை ஊற்றி நோக்கி

            மறையோனின் கண்களும் செவிகளும் திறந்திருக்கும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...