பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகா ராஜன்

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகா ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகா ராஜன்

                        சத்திரத்தின் முன்னனையில் ஏழைக் கோலம் எடுத்து

                        நம் இயேசு பிறந்தாரே

                        எங்க குழந்தையா தவழ்ந்தாரு

                        கொண்டாடுவோமே கொண்டாடுவோமே

                        நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே

 

1.         விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்

            தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும்

            மேய்ப்பர்கள் நடுங்கும் போது

            தேவதூதன் சொன்ன வார்த்தை

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே

            நமக்கொரு  பாலகன் பிறந்துவிட்டாரே

                        ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே

                        இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே

 

2.         உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும்

            பூமியில் சமாதானம் உண்டாகட்டும்

            மனுஷர் மேல் பிரியமும்

            மலர்ந்திட வேண்டுமென்று

            மரியின் மகனாக பிறந்துவிட்டாரே

            நம் வாழ்வின் ஒளியாக வந்துவிட்டாரே

                        ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே

                        இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு