சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்

                        கிறிஸ்தேசு பிறந்தாரே

                        தீர்க்கனின் வார்த்தை நிறைவேற

                        தாழ்மையாய் உதித்தாரே

                                    தொழுவம்தான் எந்தனின் பெருமகனின்

                                    ஏழ்மையின் மாளிகையோ

                                    புல்லனையில் தவழும் அதிபனுக்கு

                                    பாடுவேன் ஆரிரோ

                        ஆடுங்கள் கொண்டாடுங்கள்

                        நம் இறைவன் பிறந்தாரென்று

                        பாடுங்கள் கொண்டாடுங்கள்

                        நம் இறைவன் உதித்தாரென்று

 

1.         மேய்ப்பர்கள் கலங்கிட

            வானிலே உதித்தாரே தேவன்

            காரிருள் வேளையில்

            புல்லணையில் தவழ்ந்தாரே ராஜன்

            தூதர் பாட்டை கேட்ட

            மந்தை மேய்ப்பர்

            அங்கு பணிந்து போற்றவே விரைந்தார்

            மந்தையோடு சென்ற மந்தை மேய்ப்பர்

            நம் பாலன் இயேசுவை பணிந்தார்

            பொன் பவளம் தூபம் கொண்டு ஞானியர் பணிந்தார்

            ஊரெங்கும் பாடல்கள் தூதர் பாடி மகிழ்ந்தார்

                        - ஆடுங்கள்                

 

2.         உலகத்தின் இருளினை மாற்றிட

            ஒளியானார் நம் தேவன்

            மனிதற்கு ஒளியினை காற்றிட

            மனுவானார் ராஜன்

            தன்னைத் தானே பலியாய் தருவார்

            நமக்காக சிலுவையில் மரித்தார்

            சாவாமை கொண்ட எங்கள் மீட்பர்

            பாவ சாவை வெல்லவே ஜெனித்தார்

                        மண் மீது மாட்சித் தோன்ற மானிடனானார்

                        மாட்சிமை இறைவன் வாக்கில் மகிபனானார்

                                    - ஆடுங்கள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு