வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்

வானாதி பரனொரு நரரூருவானார் பாடிப் போற்றுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்

            வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்

 

பல்லவி

                        ஆனார்மக வானார் மகிழ்

                        வானோர் துதி பாடிடவே

                        தானாய்த யாபரனார் திரு

                        சேயாய்ப் புவி அவதரித்தே திரி

                        தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை

                        சத்திர மத்தியில் சித்திர முன்னணை

                        கந்தைய ணிந்துனின் நிந்தை தொலைந்தினி

                        சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட

                        தந்தோம் உயிர் மாபலியாகிட

                        வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட

                        தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்

                        பெத்தலை யுற்றநம் கர்த்தனுக் கேதுதி

                        தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி

                        சுகிர்த சுசுரதுதி சுரரொடு நரரினி

                        தாம் தாம் தரிகிட தீம் எனத்

                        தொந்தோம் என்றாடிப்பண் பாடிட - வானாதி

 

சரணங்கள்

1.         தேவாதி தேவன் முனம்

            இனிவரு வோமென் றோதி ஆதம்

            ஏவாளின் பவம் அறக்

            கனிமரி தாய் ஒன்றான சேயாய்

            பாவமுள்ள உலகத்தின்

            பாவந் தொலைந் தோடிடவே

            ஆவால் புவி மானிடனாகியே

            பேயின் தலை சிதையுற மிதித்தவன்

            புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்

            நித்திய அக்கினி பற்றி ஒழிததிட

            சுத்தர் துதித்திடவும் முத்தியளித்திடவும்

            சித்தமி குத்துனையே நத்தியழைத்திடவும்

            வந்தார் இனி வானவ ரோடு நாம்

            தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட - வானதி

 

2.         எண்ணிறைந்த தூதர் சேனை

            பண்கள் பாடித் தோத்திரிக்க

            விண்ணிறைந்த வான ஜோதி

            தோன்றி மேய்ப்பர் காட்சி கண்டிட

            மன்னன் தாவீ தூரில் சிறு

            கன்னிமரி பாலனாக

            முன்னணைக் கந்தையின் மேலே

            வந்தாரே கிறிஸ்தெனும் ரட்சகர்

            நற்செய்தி யிச்சணம் கர்த்தனைக் காணுமென்

            றற்புத மோதிடத் தற்பரன் சேனைகள்

            இந்நில மக்களொரு மிக்கநற் பிரியமும்

            உன்னத மதின்தேவ தேவனுக்கு மகிமையும்

            பூலோகத்தில் சமாதானமு

            மாகவென் றேதுதி பாடிட - வானாதி

 

3.         கர்த்தாவின் செயல்மிக்க

            ஆச்சரியம் அன்பு பாரும்

            சற்றாகிலும் அறியா

            துற்று நோக்கும் தூதர் பாரும்

            முத்தொழிற்கும் கர்த்தனாக

            மூவேந்தர் துதித் தேற்றிடவே

            பெற்றோர் களிகூர்ந்திட நாமும்

            பெத்தலை ஏகியே புல்லணை

            சத்திய நாதனை நித்திய தேவனை

            எத்திசை போற்றுமே சத்தனை கர்த்தனை

            உத்தம சீலனாக வுத்தர வாதஞ்செய்ய

            ரத்தமும் சிந்தி உனைத் தத்தமதாக்கி மண

            ஜீவமுடி சூட வந்த

            தேவாட்டுக் குட்டியைப் பாடுவோம் - வானாதி

 

4.         எல்லா உலகும் செய்த

            பரம பிதாவைப் பாடிப் போற்றுவோம்

            பொல்லாரை மீட்க வந்த

            புண்ணிய சுதனைப் பாடி வாழ்த்துவோம்

            பாவ இருள் நீக்கும் பரி

            சுத்த ஆவியைப் போற்றிடுவோம்

            தேவ திரித்துவ மாகிய

            தேவாதி தேவனைப் பாடுவோம்

            மைந்தனாய் விந்தையாய் வந்துயிர் தந்துநம்

            சொந்தமா நிந்தைகள் நைந்திட நாமினி

            திரிமுத லொருவனைத் தினமடி யவர்க்கருள்

            தருமனு வேலனைத் தீனதயாளனை

            தீங்குரல் யாழொடு வான்புவி

            தேவாதி பாலனைப் பாடுவோம் - வானாதி       

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு