முத்து முதலூர் உன்னத ஆலய

முத்து முதலூர் உன்னத ஆலய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை Youtube ல் காண...

 

 

 

 

 

முத்து முதலூர் உன்னத ஆலயம்

 

பாடியவர் : திரு. ஈ. குருபாதம்

 

எடுத்தியம்பியவர்: திரு. கு. ஈசாக்கு

 

 

1.       முத்து முதலூர் உன்னத ஆலய

                        அலங்கார வேலையைப்பார் - அதில்

            முத்துப் போல் நீலக் கண்ணாடி

                        வகையுடன் ஆல்டரின் தன்னழகும்

 

2.         அந்த உன்னத ஆலய நீளத்தின்

                        தன் அடி நூற்று ஐம்பத்தொன்று - அதில்

            தென்வட லோடியே ஐம்பத்திரெண்டடி

                        அத்தனின் ஆலயமும்.

 

3.         ஈராறு தூண்கள் ஏந்தும் ஆழாங்கல்

                        ஐம்பத்தெட்டு உண்டு-அதில்

            ஈராறு மாராப்பு உத்திரமுடனே

                        மதலைக்கை ஐம்பத்தாறு.

 

4.         அந்த மல்லுக்கை நூற்று ஐம்பத்திரெண்டு

                        உத்திரங்கள் நான்கு - அதில்

            தாழ்வாரக்கை நூற்று முப்பத்தாறு

                        கொடி உத்திரம் ஏழு

 

5.         இந்த ஆகாய மண்டல வாய்வதை உட்கொள்ள

                        ஈரிரண்டு கதவுகளும் - இன்னும்

            பிரதான வாசலும் பெரிய கதவொன்றும்

                        அழகாக இலங்குவது பார்?

 

6.         அங்கு தென்றல் அடித்து நறுமணம் வீரிட

                        ஜன்னல்கள் பத்தொன்பது - அதில்

            அச்சரம் உரைத்தார் லூக்கா சுவிசேஷம்

                        இரண்டு பதினான்கு.

 

7.         அந்த மெஞ்ஞான தீட்சையின் அலங்காரத்

                        தொட்டியின் சிங்கார வேலையைப் பார் - அங்கே

            பரிசுத்த ஆவி புறா ரூபம் ஆனதும்

                        தேவாட்டுக் குட்டியுண்டு

 

8.         அதில் கொத்துக் கொத்தாய்ப் பல முத்து முத்தாய்ச் சில

                        சித்திர வேலையுண்டு- அதைச்

            சுற்றியே ஈராறு வர்ணப்பளிங்குகள்

                        முத்துப்போல் மின்னுது பார்

 

9.         சுற்றிவர தெங்கு சோலை

                        கோட்டைக்குள் தோப்பும் - அதில்

            சங்கை ரெவரன்ட் ஜி.பி. ஞானமணி

                        மேன்மை குணமும்

 

10.       குருபாதம் எண்ணியே பார்த்தார்

                        தென்னை மரங்கள் ஐம்பத்தெட்டு - அதில்

            சிங்காரச் சோலை அரளி வகையுண்டு

                        மாமரச் சோலையுண்டு

 

11.       எனக்குக் களியல் முறைதனைக்

                        கற்றுக் கொடுத்தவர் நோவா அண்ணாவி - அவர்

            பாதம் பணிந்து கவிதனைப் பாடினேன்

                        பாலன் குருபாதம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு