27 July 2020

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்

          தேற்றரவாளனே என் தேற்றரவாளனே

            என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே

 

                        உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா

                        நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா

                        பரிசுத்த ஆவியாலே எம்மை நிரப்பும் ஐயா

                        எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா

 

1.         ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

            இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும்

            நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை

            எல்லாம் நீரே கற்றுத் தாரும்

            ஆவியே நீர் இருந்தால் போதும்

            அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்

            ஆவியே நீர் வந்தால் போதும்

            எங்களுக்குள்ளே சமாதானம் நிரம்பி வழியும்.    - உலகத்திற்கு

 

2.         அன்பு சந்தோஷம் சமாதானம்

            நீடிய பொறுமை தயவு நற்குணம்

            விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம்

            ஆகிய ஆவியின் கனியை தரும்

            உலகத்தை கலக்கிடவே

            ஆவியே நீர் எமக்குள்ளே வாசம் செய்யும்

            உமக்காக வாழ்ந்திடவே

            ஆவியானவர் எமக்குள்ளே வாசம் செய்யும்.        - உலகத்திற்கு


                        Thaetraravaalanae en thaetraravaalanae

                        En Yesu kristhu anuppi vaiththa thaetraravaalanae

                        Ulakaththitku neerthan ippoa vaendum aiyaa

                        Neerillaatha vaer aavi emakku vaendaam aiyaa

                        Parisuththa aaviyaalae emmai nerappum aiyaa

                        Emmai nerappum nerappum aiyaa

 

1.         Aaviyaana engkal anbu theivamae

            ingku vanthu paaviyaana engkalai nerappum

            Naangkal onrum illai emakku gnaanam onrumillai

            Ellaam neerae katruth tharum

            Aaviyae neer irunhthal poathum

            Angkae oru viduthalai perukkeduththoadum

            Aaviyae neer vanthal poathum

            Engkalukkullae samaathanam nerampi vazhiyum.        - ulakaththitku

 

2.         Anbu sanhthoasham samaathanam

            Neetiya porumai Thayavu natkunam

            Visuvaasam saanhtham ichsaiyadakkam

            Aakiya aaviyin kaniyai tharum

            Ulakaththai kalakkidavae

            Aaviyae neer emakkullae vaasam seiyum

            Umakkaaka vaazhnhthidavae

            Aaviyaanavar emakkullae vaasam seiyum.       - ulakaththitku

24 July 2020

இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே

இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே

          இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே

            அதை நினைத்து எந்நாளும் நான் ஏங்குகின்றேனே

 

                        உம்மை நான் பார்க்கனும்

                        உம்மோடு பேசனும்

                        உம் மார்பில் சாயனும்

                        உம்மில் இளைப்பாறனும்

 

1.         செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் எண்ணித் துதிக்கனும்

            செய்யப் போகும் நன்மைகளை நினைத்து மகிழனும்

 

2.         வாதையையும் நோய்களையும் எனக்காய் சுமந்தீரே

            மெய்யான உம் தழும்புகளால் குணமாக்கினீரே

 

3.         நன்றி உள்ள இருதயத்தால் உம்மை அழைத்தேன்

            நல்லவரே என் குரல் கேட்டு பதில் தருவீரே

 

4.         உந்தன் கையில் அழங்கார கிரீடமாகவும்

            உம் கரத்தில் ராஜ முடியாய் என்னை வைத்தீரே


            Yesappaa en aasai ellaam ummoaduthanae

            Athai nenaiththu enhnaalum naan aengkukintraenae

 

                        Ummai naan paarkkanum

                        Ummoadu paesanum

                        Um maarpil saayanum

                        Ummil ilaippaaranum

 

1.         Seitha nanmaikal ovvonraiyum ennith thuthikkanum

            Seiyap poakum nanmaikalai nenaiththu makizhanum

 

2.         Vaathaiyaiyum nhoaikalaiyum enakkaai sumantheerae

            Meiyaana um thazhumpukalaal kunamaakkiniirae

 

3.         Nandri ulla iruthayaththal ummai azhaiththaen

            Nallavarae en kural kaetdu pathil tharuviirae

 

4.         Unthan kaiyil azhangkaara kiriidamaakavum

            Um karaththil raaja mutiyaai ennai vaiththiirae

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...