24 December 2021

வானத்துல நட்சத்திரம் பூமியில முத்துச்சரம்

வானத்துல நட்சத்திரம் பூமியில முத்துச்சரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   வானத்துல நட்சத்திரம்

                        பூமியிலே முத்துச்சரம்

                        நட்சத்திரம் வந்து நின்றது

                        முத்துச்சரம் இங்கு பிறந்தது

                        தேடி வந்த தேவ கரம்

                        சூழ்ந்திருந்த பாவ பாரம்

                        தேவ கரம் தேடி வந்தது

                        பாவ பாரம் ஓடி போனது

 

1.         மாளிகையும் இல்ல மகுடமும் இல்ல

            மன்னவரு வந்தாரு மன கவல இல்ல

            அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமாய் மாறும்

            இனிமே துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்

            நம்மோடு உறவாட ஒரு பாலனாய்

            வாதும் சூதும் ஏதும் இல்லாமலே

            ஏசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்

 

2.         தந்தது காட்சி கொண்டது மீட்சி

            அநீதியும் ஓடி போச்சி நீதியாச்சி

            முந்தின ஆதாம் வந்து பாவத்தையே தந்தான்

            பிந்தின ஆதாம் இயேசு மோட்சத்தையே தருவார்

            இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல

            இனிமேலும் இது போல வருவதில்ல

            ஏசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே

இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே

            தம் நேசத்தால் என் வாழ்வை

            முற்றும் மாற்றிற்றே எவருள்ளும் பிரகாசிக்கும்

            மெய் ஒளியாய் வந்தவரே

            என் உள்ளத்தில் உம் மகிமையை

            ஆனந்தமாய் தந்தவரே

 

                        வானவர் ஜோதியின் பிதா

                        வாருமென்று அழைத்தீரே

                        இயேசுவே என்னில் பிறந்தீர்

                        என் உள்ளத்தில் சந்தோஷமே

 

1.         அன்பான உந்தன் கரம் என்னை அணைத்ததே

            கண்ணீரை துடைத்து என்னை வாழ வைத்தீரே

            உம் கிருபை உம் இரக்கம் மானிடர் மேல் இறங்கிற்றே

            உம் தயவு உம் காருண்யம் உம் பிறப்பால் நாம் காண்போமே

 

2.         காணாமல் போன என்னை தேடி வந்தீரே

            நல்மேய்ப்பராக என்னை நடத்தி வந்தீரே

            என் மேய்ப்பனே என் ஆயனே என் பாதைகள் நீர் அறிவீர்

            இம்மானுவேலின் ரத்தத்தால் என் பாவத்தை நீக்கினீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...