31 December 2024

இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்

இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இதுவரை நடத்தினார் இனியும் நடத்துவார்

            எபினேசர் அவர் நாமம் போற்றிப் பாடுவோம் - 2

 

                        போற்றிப் பாடுவோம் புகழ்ந்து பாடுவோம் - 2

 

1.         செங்கடலும் வந்தது அதனை பிளந்தார்

            யோர்தான் வந்தது பிரித்தார் - 2

            எரிகோ வந்தது உடைத்துப் போட்டார்

            எதிரி சாத்தானை மிதித்துப் போட்டார் - 2 - இதுவரை

 

2.         குறைவுகள் வந்தபோது நிறைவாய் வந்தார்

            தோல்வியின் பாதையில் ஜெயத்தைத் தந்தார் - 2

            சுகவீனம் நேரத்தில் (வந்தபோது) சுகத்தைத் தந்தார்

            தடுமாறும் வேளையில் தாங்கிப் பிடித்தார் - 2 - இதுவரை

 

3.         மலைகள் விலகிப் போனாலும் என்ன

            பர்வதங்கள் அசைந்து போனாலும் என்ன - 2

            இதுவரை நடத்தினார் (நடத்தினவர்) இனியும் நடத்துவார்

            சோர்ந்து போகாமல் ஜெயித்து முன்னேறுவோம் - 2 - இதுவரை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்

சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்

            சபையாக ஆராதிப்போம்

            சேர்ந்து துதிப்போம் சேர்ந்து ஜெபிப்போம்

            பரிசுத்தமாய் ஆராதிப்போம் - 2

 

                        ஆராதிப்போம் ஆராதிப்போம்

                        நன்மை செய்தவரை ஆராதிப்போம்

                        ஆராதிப்போம் ஆராதிப்போம்

                        நன்றி பலிகள் ஏற்றி ஆராதிப்போம் - 2

 

1.         செங்கடலை பிளந்தவரை ஆராதிப்போம்

            சேனைகளின் கர்த்தரை நாம் ஆராதிப்போம்

            சாத்தானை ஜெயித்தவரை ஆராதிப்போம்

            சாவை வென்று நல்லவரை ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

2.         வியாதிகளை நீக்கியதால் ஆராதிப்போம்

            வாதைகளை போக்கியதால் ஆராதிப்போம்

            வார்த்தைகளால் உயிர்பித்தார் ஆராதிப்போம்

            வாழ்வாங்கு வாழவைத்தார் ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

3.         தாழ்விலே நினைத்த வரை ஆராதிப்போம்

            தலை நிமிர செய்தவரை ஆராதிப்போம்

            அடிமரத்தை துளிர்க்க வைத்தீர் ஆராதிப்போம்

            தலைமுறையை செழிக்க வைத்தீர் ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...