24 February 2022

இயேசு ராஜன் வந்து விட்டார்

இயேசு ராஜன் வந்து விட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசு ராஜன் வந்து விட்டார்

                        நாம் கூடும் இந்த இடத்திலே

                        ஓசன்னா ஒசன்னா (2)

 

1.         இருளான உன் வாழ்வு தான்

            இப்போ வெளிச்சமாகவே மாறுதே

            இயேசுவின் பேரொளி நம் மேல் வீச

            எழும்பி ஜொலித்திடுவோம் (2)

 

2.         சாத்தானை ஜெயித்த இயேசு தான்

            நம்மில் உலாவிக் கொண்டு இருக்கிறார்

            நோய்களும் பேய்களும்

            சாபங்களெல்லாம் பயந்து ஓடிடுதே

 

3.         அந்தகார வல்லமை முறித்திட

            ஆவியானவர் இறங்கியிருக்கிறார்

            கர்த்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்

            அறுக்கப்படுகிறதே

 

4.         ஆவியின் வல்லமை நம்மிலே

            இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்

            அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய

            அக்கினி இறங்கிடுதே

 

5.         ஆசீர்வதிக்கும் கரங்களே

            நம் சிரசின் மேலே அமருதே

            நன்மையும் கிருபையும் சுகமும்

            பெலனும் பாய்ந்து வருகின்றதே

 

6.         துதிகளின் நடுவில் வசிப்பவர்

            இப்போ நமக்குள்ளே வந்திருக்கிறார்

            ஒரு மனமாய் நாம் ஆவியில் நிறைந்து

            கர்த்தரை துதித்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...