12 February 2022

ஆவியானவரே என்னை பெலப்படுத்தும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே என்னை பெலப்படுத்தும்

                        இயேசுவின் நல் சாட்சியாய் வாழ்ந்திடவே

 

1.         எந்தனின் கண்களைப் பெலப்படுத்தும்

            உலகத்தின் ஆசையில் மயங்கிடாமல்

            உமது வேதத்தில் பிரியம் கொள்ள

            இயேசுவே என்னை பெலப்படுத்தும்.

 

2.         எந்தனின் நாவை பெலப்படுத்தும்

            வீண் வார்த்தை பொய்களைப் பேசிடாமல்

            உம்மையே துதித்து நான் பாடிடவே

            இயேசுவே என்னை பெலப்படுத்தும்

 

3.         எந்தனின் கைகளைப் பெலப்படுத்தும்

            இருளான கிரியைகள் செய்திடாமல்

            உம் நேசக் கொடிதனை உயர்த்திடவே

            இயேசுவே என்னைப் பெலப்படுத்தும்

 

4.         எந்தனின் கால்களைப் பெலப்படுத்தும்

            பாவச் சோதனைகளில் தடுமாறாமல்

            நற்செய்தி அறிவிக்க விரைந்திடவே

            இயேசுவே என்னை பெலப்படுத்தும்.

 

5.         எந்தனின் உள்ளத்தைப் பெலப்படுத்தும்

            மாயையான சிந்தைக்கு இடம் தராமல்

            இயேசுவே இதயத்தின் ராஜாவாக

            ஆட்சி செய்து என்னை பெலப்படுத்தும்

 

6.         என்னையே முற்றிலும் தத்தம் செய்தேன்

            உம் திருப்பாதத்தில் அர்ப்பணித்தேன்

            இறுதி வரை எல்லா நிலைகளிலும்

            உறுதியுடன் உம்மைப் பின்பற்றுவேன்

 

- J. Arputharaj Margoschis

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...