கர்த்தருடைய இராப்போஜனமாகிய பரிசுத்த நற்கருணையைக் கொடுக்கும் முறைமை

THE ORDER OF THE ADMINISTRATION OF HOLY COMMUNION

*கர்த்தருடைய இராப்போஜனமாகிய பரிசுத்த நற்கருணையைக் கொடுக்கும் முறைமை*

 

பரிசுத்த நற்கருணை பெறவேண்டுமென்று இருக்கிறவர்கள் அதைப் பரிமாறுகிற நாளுக்கு *முந்தின நாளுக்குள்ளாகத் தங்கள் பேர்களைக் குருவானவருக்கு அறிவிக்கவேண்டும்.*

 

ஒருவன் வெளியரங்கமாய்ப் பாவஞ்செய்து துன்மார்க்கனென்று பேர்பெற்றோ அல்லது வார்த்தையினாலாவது செய்கையினாலாவது பிறருக்கு அநியாயம் செய்து. தன் துன்மார்க்கத்தினிமித்தமோ அல்லது அநியாயத்தினிமித்தமோ சபைக்கு வெட்கம், அபகீர்த்தி அல்லது இடறல் உண்டாக்கியிருக்க, இவன் நற்கருணைக்கு வர விரும்புகிறான் என்றோ அல்லது பெற்றுக்கொள்ளப்போகிறான் என்றோ குருவானவருக்குத் தெரிந்தால், அப்படிப்பட்டவன் வெளியரங்கமாய் வந்து தான் மெய்யாய் மனந்திரும்பி தன் ஜீவியத்தைச் சீர்ப்படுத்தினதாகக் காட்டுமளவும் *நற்கருணையில் சேரக்கூடாதென்று அவனை எச்சரிக்கவேண்டும்.* இவ்வித எச்சரிப்புக்குப் பின்னும் அவன் துணிந்து வருவானாகில், அவன் கர்த்தருடைய பந்தியில் *சேர இடங்கொடுக்கலாகாது.*

 

ஒருவரையொருவர் வர்மித்துச் சண்டையிட்டுக்கொண்டிருப்பவர்கள் யாராகிலும் நற்கருணைக்கு வருவார்களென்று எண்ண இடமிருக்குமாகில், குருவானவர் அவர்களை எச்சரித்து, அவர்கள் ஒருவருக்கொருவர் *ஒப்புரவானார்களென்று அறியுமளவும் அவர்கள் கர்த்தருடைய பந்தியில் சேர இடங்கொடுக்கலாகாது.* இப்படி விலக்கப்பட்டவர்களில் ஒருவன் மனஸ்தாபப்பட்டு தான் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் செய்ய மனதாயிருக்க, மற்றவன் மனக்கடினமாயிருந்தால், தன் குற்றத்திற்காக மனஸ்தாபப்பட்டவளைச் சேர்த்துக் கொண்டு, *மனக்கடினமாயிருப்பவனை விலக்கவேண்டும்.*

 

இந்த *ரூபிரிக் சட்டத்தின்* முந்தின இரண்டு பிரிவுகளில் கண்டிருக்கிறபடி குற்றஞ் செய்தவர்களைக் குருவானவர் கர்த்தருடைய பந்தியிலிருந்து விலக்கியிருப்பாரானால், அதைக் கண்டிப்பாய்ப் *பதினான்கு நாட்களுக்குள் அத்தியட்சருக்குத் தெரியப்படுத்தவேண்டும்.* அத்தியட்சர் தம் யுக்திப்பிரகாரம் இதைத் தாமே விசாரிக்க வேண்டும் அல்லது *கனோன் சட்டப்படி மற்றவர்களைக்கொண்டு விசாரணை செய்யவேண்டும் அல்லது குருவைக்கொண்டாவது தாமாகவாவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்தவாறு எச்சரித்து அவர்களை பரிசுத்த நற்கருணையில் சேர்த்துக்கொள்ளும்படி குருவானவருக்கு உத்தரவளிக்கலாம்.*

 

            நற்கருணை பரிமாறும் தருணத்தில் மேசையின்மேல் மெல்லிய வெள்ளைத் துப்பட்டியை விரித்து, கோவில் நடுவேயாவது, கீழ்ப் பக்கத்திலாவது, காலை, மாலை ஜெபம் சொல்ல நியமித்திருக்கும் இடத்தில் அதை வைக்கவேண்டும்.  ஜனங்கள் முழங்கால்படியிட்டிருக்க, குருவானவர் மேசைக்கு வடபக்கத்தில் நின்று கர்த்தருடைய ஜெபத்தையும் அதற்குப் பின்வருகிற சுருக்க ஜெபத்தையும் சொல்லவேண்டும்.

 

(தொடரும்...)

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு