30 November 2021

எனக்காக பாலன் பிறந்தார்

எனக்காக பாலன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          எனக்காக பாலன் பிறந்தார்

            என் ஆத்ம நேசர் பிறந்தார்

            எந்தன் பாவம் நீக்கி

            என்னை மீட்டுக் கொண்டார்

            என்றும் பாடி துதிப்பேன்

 

                        அல்லேலுயா அல்லேலுயா

                        அவர் அன்பில் மகிழுவேன்

                        அல்லேலுயா அல்லேலுயா

                        அவரையே புகழுவேன்

 

1.         மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்

            தாயன்பில் மேலானதே

            கானங்கள் ஆயிரம் பாடினாலும்

            என் நன்றி ஈடாகுமோ

 

2.         வான்லோகத்தில் விண்வேந்தனாக

            ராஜ்ஜியம் செய்திடாமல்

            அழியாத ஜீவன் எனக்கீந்திட

            அடிமையின் ரூபமானீர்

 

- ஜேக்கப் ஞானதாஸ்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

மண்ணில் பிறந்தாரே தேவன்

மண்ணில் பிறந்தாரே தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மண்ணில் பிறந்தாரே

                        தேவன் ஏழைக்கோலமதாய்

            விண்ணைத் துறந்கதாரே

                        ராஜன் பாவ! மானிடர்க்காய்

            பண் இசைத்துப் பாடும்

                        விண்ணின் தூதர் கூட்டம்

            கண்ட ஆயர் கூட்டம்

                        ஆண்டவரைப் போற்றும்

            பாரெங்கும் நற்செய்தி

                        இறையரசின் ஆட்சி

            அன்றும் இன்றும் என்றும் வாழ்க

 

1.         பாவங்கள் சாபங்கள்

            கஷ்டங்கள் நஷ்டங்கள்

            விலகி ஓடியதே

            வேதங்கள் கீதங்கள்

            பாடல்கள் தாளங்கள்

            எங்கும் தொனித்திடுதே

            உன்னதத்தில் மகிமையும்

            பூமியிலே சமாதானமும்

            மானிடர் மேல் பிரியமும்

            உண்டாகட்டும் தொடரட்டும்

 

2.         அதிசயங்கள் அற்புதங்கள்

            அனுபவங்கள் அறிவுரைகள்

            இயேசு தந்தாரே

            இடறல்கள் இன்னல்கள்

            தீமைகள் சோதனைகள்

            இயேசு ஜெயித்தாரே

            உனக்காக எனக்காக

            தன்னுயிரை ஈந்தாரே

            இந்த நாளில் அந்த அன்பை

            எண்ணி எண்ணி போற்றிடுங்கள்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...