சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
சீர்திரியேக வஸ்தே நமோ
4. பூரிகல்யாணி ஆதிதாளம்
பல்லவி
சீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்
திருவடிக்கு
நமஸ்தே நமோ, நமோ!
அனுபல்லவி
பார்படைத்தாளும்
நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! - சீர்
சரணங்கள்
1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
தாங்கி
ஆதரிப்போனே - நமோ, நமோ!
சொந்தக்
குமாரன் தந்தாய்,
சொல்லரும்
நலமீந்தாய்,
எந்தவிர்
போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. - சீர்
2. எங்கள்
பவத்தினாசா நமோ நமோ, புது
எருசலேம்
நகர்ராசா நமோ நமோ!
எங்கும்
நின் அரசேற,
எவரும்
நின் புகழ்கூற,
துங்க
மந்தையிற் சேர, நமோ, நமோ, நமோ. - சீர்
3. பரிசுத்த
ஆவிதேவா நமோ, நமோ, திட
பலமளித்
தெமைக்காவா, நமோ, நமோ!
கரிசித்துத்தா
நற்புத்தி,
கபடற்ற
மனசுத்தி,
திருமொழி
பற்றும்பக்தி, நமோ, நமோ, நமோ - சீர்
- ஞா. சாமுவேல்
good soung
ReplyDeleteமிக்க நன்றி!
Delete