திரி முதல் கிருபாசனனே சரணம்
திரிமுதல் கிருபாசனனே
2. (3) சங்கராபரணம் ஆதிதாளம்
1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக
தல ரட்சக தேவா, சரணம்!
தினம்
அனுதினம் சரணம்; - கடாட்சி!
தினம்
அனுதினம் சரணம், - சருவேசா!
2. நலம்
வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி
உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன்
இது தருணம் - தருணம்;
நம்பினேன்,
தினம் சரணம் - சருவேசா!
3. அருவுருவே,
அருளரசே, சரணம்!
அன்று
மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே,
தருணம் - கிரணமொளிர்
அருள்
வடிவே, சரணம். - சருவேசா!
4. உலகிட
மேவிய உனதா, சரணம்!
ஓர்
கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி
அருள்வாய், தருணம் - மனுவோர்க்கு
உத்தமனே,
சரணம்; - சருவேசா!
5. நித்திய
தோத்திர நிமலா, சரணம்!
நிதி
இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா,
இது தருணம் - கிருபைக்கொரு
ஆதாரா,
சரணம்; - சருவேசா!
- தஞ்சை சத்தியநாதன்
Comments
Post a Comment