13 July 2013

சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்இலதாய்


1.       சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
            சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
            எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
            அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

2.         எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
            கைம்மாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
            சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
            அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

3.         ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
            தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
            மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
            ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

4.         மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
            ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
            நையேல் கை வெகிவேனுனை நாணுன் பஞ்சலென
            ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

5.         திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
            கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
            பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
            அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

6.         தாயே தந்தை தமர், குரு சம்பத்து நட்பெவையும்
            நீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்,
            ஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை
            ஆயேவுன்னை அல்லால்லெனக் கார் துணை யாருறவே?



உரைநடை:

பாடல் வரிகளின் அர்த்தம்:

சத்தாய் = சத்தியமாய்/மெய்யாய் (இருக்கிறவராய் இருக்கிற)
ஒருசாமிய மும் இலதாய் = ஒப்புமைக்கு வேறு எந்த சாமியும் இல்லாதவராய்
அம்மான்=தந்தை/கடவுள்
அத்தா->அத்தன்= தகப்பன்
துப்பார் = தூயவர்


1)
சத்தியமாய்/மெய்யாய் (இருக்கிறவராய் இருக்கிற)
எங்கும் நிறைந்திருக்கிற
ஒப்பான வேறு எந்த சாமியும் இல்லாத  / ஒப்பில்லா தன்மையுடையவராயிருக்கிற
சர்வ ஞானியாய் / அனைத்தையும் அறிந்தவராய்
பேரின்பமாய் / மெய் ஆனந்தமாக திகழ்கின்ற
திரித்துவ தேவனே

நாயைபோன்ற கீழ்நிலையிலிருக்கும் நான் (தனியாக)
என்ன செய்து/எவ்வாறு/எப்படி என் பாவங்களை எல்லாம் தீர்த்து மீள முடியும்
(அவ்வாறு எனது பாவத்திலிருந்து மீள்வதற்கு)
அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

2)
எம் ஆவிக்கு / எம் ஆன்மாவிக்கு  மனம் இறங்கி
தன் உயிரையே கொடையாக கொடுத்து காப்பாற்றியதற்கு / இரட்சித்ததற்கு / மீட்டுக் கொண்டு வந்ததற்கு ஏதாவது கைமாறு / பிரதிபலன் உண்டோ என்று
கடை காறும் / உலகின் எல்லை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை

சும்மா/விலையில்லாமல் என்னைக் காப்பாற்றும்/ இரட்சியும்
என்று சொல்வதற்குகூட சுதந்திரம் எனக்கில்லை.
(அவ்வளவு பாவியானவன் நான்)
அம்மான்/தந்தையே/கடவுளே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

3)
பெருங்கடலாய் திரண்டுள்ள எம் பாவமாய் கடலிலே மூழ்கிய எம்மை
கரை சேர்த்து காப்பாற்ற தெப்பமாக/படகாக வந்த உம்மை
கண்ணில்லாதவனைப்போல/பார்வையற்றவனைப்போல் நான்
தொடவில்லை / பற்றவில்லை.
ஆனால், (இவ்வாறு உம்மை பற்றாது இருக்கிற)
என்னை நீர் கைவிடாது காப்பாற்றிக்கொண்டிருக்கிறீரே.
அரசே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

4) 
தாயாக, தந்தையாக, உறவினராக, குருவாக, செல்வமாக, நட்பாக
என் பெருமானாகிய நீயே திகழ்கின்ற உம்மைவிட வேறு கதி/ஆதரவு எனக்கில்லை.
ஏயே என்று என்னை இகழும் இந்த உலகத்தோடு எனக்கு என்ன உரிமை உள்ளது.
(இந்த உலகோடு எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை)
ஆயே/ தாயை போன்றவரே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

5) 
பித்துபிடித்து திரியும் உலகத்தின் பேயால் பிடிக்கப்பட்டு, என் பாவத்தால் செத்தேன்
உமது அருளால்/கிருபையால் மறு ஜென்மமாய் பிழைத்தேன்./மறு பிறப்பு அடைந்தேன்.
எல்லா பாவ தோசங்களையும் பொறுத்து என்றும் எனக்கு இரங்கும் என்றேன்
அத்தா/அத்தன்/ தகப்பனே உன்னைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு?

6) 
தூயவர்/கடவுள் இருக்கிறார் என்ற சிந்தை இல்லாமல், (உலகோர் கண்ணுக்கு) மறைத்து நான் இதற்குமுன் செய்த/பழைய வினை/தீயசெயல் தப்பாமல் வெளியாகும் நடுநாள்/நியாயத்தீர்ப்பு நாளிலே என்னை தாங்கிக் கொள்ள/ ஆதரித்து காப்பாற்றுவதற்கு
இந்த பார் உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே மனித உருவம் எடுத்த

எங்கள் அப்பா உம்மைவிட்டால் எனக்கு யார் துணை? யார் உறவு

குறிப்பு:
பாடல் - விளக்க உரையில் ஏதேனும் பிழை இருந்தால்
skrajann@gmail.com
என்ற முகவரிக்கு தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...