16 July 2013

இரட்சா பெருமானே பாரும்


Saviour like a shepherd lead us
Neale.  SS 1164

326                                                     8, 7, 8, 7, 8, 7

1.       ரட்சா பெருமானே, பாரும்,
                        புண்ணிய பாதம் அண்டினோம்
            சுத்தமாக்கி சீரைத் தாரும்,
                        தேடிவந்து நிற்கிறோம்!
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        உந்தன் சொந்தமாயினோம்.

2.         மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
                        பாதுகாத்தும் வருவீர்;
            ஜீவ தண்ணீரண்டை என்றும்
                        இளைப்பாறச் செய்குவீர்;
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3.         நீதி பாதை தவறாமல்
                        நேசமாய் நடத்துவீர்!
            மோசம் பயமுமில்லாமல்
                        தங்கச் செய்து தாங்குவீர்!
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        ஒருபோதும் கைவிடிர்.

4.         ஜீவ கால பரியந்தம்
                        மேய்த்தும் காத்தும் வருவீர்;
            பின்பு மோட்ச பேரானந்தம்
                        தந்து வாழச்செய்குவீர்;
            இயேசு நாதா, இயேசு நாதா,
                        ஊழி காலம் வாழ்விப்பீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...