அமலா தயாபரா
12. (33) ரீதிகௌள ஆதிதாளம்
பல்லவி
அமலா[1],
தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா[2]
சரணங்கள்
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும்
தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த
- அம
2. அந்தம் அடி[3]
நடு இல் லாத தற்பரன் ஆதி,
சுந்தரம்
மிகும் அதீத[4] சோதிப்பிரகாச நீதி. - அம
3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத்
தேவப்ரசாத[5]
மகிமைக் களவில்லாத. - அம
4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா
வியாப[6],
சுகிர்தத்[7]
திருத் தயாப. - அம
5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,
கர்த்தத்துவ
உபாயா, கருணை பொழியும் வாயா - அம
6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல்
அரிதாம் நிதான, துல்லிபத்[8]
தொன்றாம் மேலான - அம
7. கருணாகரா, உப காரா, நிராகரா,[9]
பரமேசுரா,
கிரு பாகரா, சர்வேசுரா - அம
- வேதநாயகம்
சாஸ்திரியார்
No comments:
Post a Comment