16 July 2013

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே


துதிக்கிறோம் உம்மை

7. (155 L) சங்கராபரணம்                                          ஆதிதாளம்

1.         துதிக்கிறோம் உம்மை - வல்ல பிதாவே
            துத்தியம் செய்வோம் - உமை மா அரசே
            தோத்ரம் உம் மாட்சிமைக்கே - பரனே
            துந்துமி மாட்சிமைக்கே - பிதாவே.

2.         சுதனே யிரங்கும் - புவியோர் கடனைச்
            சுமந்ததைத் தீர்த்த - தூயசெம்மறியே,
            சுத்தா ஜெபங்கேளும் - பரன்வலத்
            தோழா ஜெபங்கேளும் - கிறிஸ்தே.

3.         நித்தியபிதாவின் - மகிமையில் நீரே,
            நிமலாவியினோ - டாளுகிறீரே,
            நிதமேகார்ச்சனையே - உன்னத
            நேயருக் கர்ச்சனையே - ஆமேன்.
- ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...