சுத்த ஆவி எண்ணில் தங்கும்
All Saints
276 8, 7,
8, 7, 7, 7
1. சுத்த ஆவீ, என்னில் தங்கும்,
நானும்
சுத்தன் ஆகவே;
பாவ
அழுக்கெல்லாம் நீக்கும்
உம்
ஆலயமாகவே
என்னை
நீர் சிங்காரியும்
வாசம்
பண்ணும் நித்தமும்.
2. சத்திய
ஆவீ, என்னில் தங்கும்
நானும்
சத்தியன் ஆகவே;
தெய்வ
பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச்
செய்யுமே;
நீர்
என்னில் பிரவேசியும்
ஆண்டுகொள்ளும்
நித்தமும்.
3. நேச
ஆவீ, என்னில் தங்கும்,
நானும்
நேசன் ஆகவே;
துர்ச்
சுபாவம் போகப் பண்ணும்;
அன்பில்
நான் வேரூன்றவே
அன்பின்
ஸ்வாலை எழுப்பும்,
மென்
மேலும் வளர்த்திடும்.
4. வல்ல
ஆவீ, என்னில் தங்கும்,
நானும்
வல்லோன் ஆகவே;
சாத்தான்
என்னைத் தூண்டிவிடும்
போது
ஜெயங்கொள்ளவே
நீர்
என் பக்கத்தில் இரும்,
என்னைப்
பலப்படுத்தும்.
5. நல்ல
ஆவீ, என்னில் தங்கும்,
நானும்
நல்லோன் ஆகவே;
பகை,
மேட்டிமை, விரோதம்,
மற்றும்
தீமை யாவுமே
என்னை
விட்டகற்றுமேன்,
என்னைச்
சீர்ப்படுத்துமேன்.
6. தெய்வ
ஆவீ, என்னில் தங்கும்,
நானும்
உம்மில் தங்கவே;
மோட்ச
பாதையில் நடத்தும்,
இயேசுவின்
முகத்தையே
தெளிவாகக்
காண்பியும்;
என்னை
முற்றும் ரட்சியும்.
Comments
Post a Comment