27 September 2021

என்னை தேற்றிடும் இயேசு என்னோடு இருக்க

என்னை தேற்றிடும் இயேசு என்னோடு இருக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை Youtube ல் காண...

 

 

 

 

          என்னை தேற்றிடும் இயேசு என்னோடு இருக்க

            எனக்கொன்றும் பயமில்லை!

            என்னை மாற்றிடும் இயேசு என்னோடு இருக்க

            எனக்கொன்றும் குறைவில்லை!

 

                        என்னை வனைந்திடுவார்

                        என்னை உருவாக்குவார்

                        அவர் சித்தம் என்னில் நிறைவேற்றுவார்! (2)

 

1.         குயவன் நீர் களிமண் நான்

            உம் சித்தம் என்னில் நிறைவேற்றுமே!

            மேய்ப்பன் நீர் மந்தை நான்

            உம் குரல் என்றும் கேட்டிடுவேன்!

 

2.         திராட்சை செடி நீர் கொடியும் நான்

            உம்மில் என்றும் நிலைத்திடுவேன்!

            உமக்குகந்த கனிதரும் கொடியாய்

            என்னை என்றும் நிலைக்க செய்யும்!

 

3.         மணவாளன் இயேசு மணவாட்டி நான்

            வருகையில் என்னை சேர்த்திடுவார்!

            அணைத்திடுவார் அன்பு கூர்ந்திடுவார்

            பரலோக வாழ்வில் களிகூறுவேன்!

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...