27 September 2021

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                    அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்

                        இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள்

                        மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

1.         Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம்

            நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம்

            மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும்

            இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே ...

            ஹே ஹே ஹே ஹே

            மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

2.         எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன்

            நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்

            ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே

            ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே

            மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

3.         ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை

            ஆயசல ஆயசவாய கூட என்னைப் போல இல்லை இல்லை

            ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு

            யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று

            மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

4.         காலங்காலமாக Christians நாங்க

            மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க

            மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே

            நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே

            மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

5.         மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு

            நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு

            உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே

            உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே

            மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்

 

 

- RAVI BHARATH

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...