27 September 2021

ஆத்ம ஆதாயம் செய்ய

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆத்ம ஆதாயம்‌ செய்ய

            என்னை உமக்குத்‌ தந்தேன்‌

            தகுதியான பாத்திரமாக்கிடும்‌

            இத்தருணம்‌ வந்திட்டேன்‌

            தந்தேன்‌ என்னையே

            ஆவியின்‌ வல்லமை தாரும்‌

            உந்தன்‌ சேவைக்கே

 

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரா

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரி

                        பிரபு சேவைக்கே தேவை உண்டு வா (2)

 

1.         வாலிபம்‌ என்றும்‌ நிலைத்து இருப்பதில்லையே

            வாய்ப்புகள்‌ என்றும்‌ நிறைவாய்‌ கிடைப்பதில்லையே

            துடிப்பான என்‌ இளமையை தந்திட்டேன்‌ இதோ

            பயன்படுத்தும்‌ உந்தன்‌ சேவைக்கே

 

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரா

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரி

                        பிரபு சேவைக்கே தேவை உண்டு வா (2)

 

2.         அழியுதே ஆத்துமாக்கள்‌ இயேசு இல்லாமல்‌

            சிரம்‌ கொடுக்கத்‌ தயங்கிடாதே தேவன்‌ நம்மோடு

            அர்ப்பணிப்போம்‌ இவ்‌ வாழ்வினை

            ஆண்டவர்‌ இயேசுவுக்கு

                        தாமதிக்க இது காலம்‌ இல்லையே

                        காலங்கள்‌ நம்‌ கையில்‌ இல்லையே

 

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரா

                        இதுவே காலம்‌ என்‌ சகோதரி

                        பிரபு சேவைக்கே தேவை உண்டு வா (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...