அந்தகார
வல்லமைகளை
தேவ பெலத்தால் முறியடிப்பேன் -2
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கே - என்றும்
பயமில்லை வெற்றி எனக்கே - 2
போராயுதம் தரிப்பேன்
போர் செய்வேன் போர் செய்வேன்
- 2
1. சேனைகளின் கர்த்தர் நாமத்தில்
பெரும் மதில்களை தாண்டிடுவேன் - 2
ஆகாய மண்டல லோகாதிபதிகள்
நடுங்கியே மறைந்திடுவார் - பயந்து
நடுங்கியே மறைந்திடுவார் - 2 - அந்தகார
2. சர்ப்பங்களை மிதித்திடவும் - பெரும்
தேள்களை நசுக்கிடவும் - 2
அதிகாரமுண்டு வல்லமையுண்டு
தோல்வியில்லை ஜெயம் எனக்கே - என்றும்
தோல்வியில்லை ஜெயம் எனக்கே - 2 - அந்தகார
3. வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும்
தூய ஆவியாலே கொடியேற்றுவேன் - 2
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே - வஞ்சக
சாத்தானை வீழ்த்திடுமே - 2 - அந்தகார
No comments:
Post a Comment