27 September 2021

அந்தச் சிலுவையை நேசிப்பேன்

கீ.கை:209

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

209. இராகம்: ஆங்கிலம்.                                                                                                      தாளம்: ஆதி

 

                             பல்லவி

 

                   அந்தச் சிலுவையை நேசிப்பேன்

                   பலம் ஓய்ந்து நான்சாகும் வரை,

                        தொல்சிலு வையைநான் பற்றுவேன்

                        பின்அதால் கிரீடத்தை அணிவேன்

 

                             சரணங்கள்

 

1.         கொல்கொதா மலைமேல் தோன்று தோர் சிலுவை

            அல்லல் பழிப்பின் சின்னமதாம்,

            நீசப்பாவி கட்காய் நேசர்மாண் டாரதில்

            நேசிப்பேன் அத்தொல் சிலுவையை.

 

2.         தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து

            உலகொர் பழித்த குருசை,

            கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்

            கவர்ந்த தென்னுள்ளத் தைஅது.

 

3.         என்பாவம் மன்னிக்க, என்னைச் சுத்தமாக்க,

            நேசர் மாண்ட சிலுவையதோ!

            தூய குருதி தோய்ந்த அந்தச் சிலுவை

            அழகெத் தனைமாட் சிமைபார்!

 

4.         குருசின் இழிவை மகிழ்வாய்ச் சுமந்தே

            மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்

            பின்னால் மோட்ச லோகில் நேசர் கூட்டிப்

            பங்களிப் பார்தம் மகிமையில்!

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...