395.
இராகம்: ஹிந்தோளம் ஆதி தாளம்
பல்லவி
அந்தரங்கமாக வந்த நீர் ஆர்? சொல்ல வேணும்
யேசையரோ காணும்
அனுபல்லவி
கந்த[1] மா
மலர் சோலை சூழ் வெல்லை
காவில்
வந்தீரோ! என்மேற்
காதல்
கொண்டீரோ!
சரணங்கள்
1. பாதியிரவிற்
பரம சேனைகள் பாடுவதேதோ! வெகு
சோதியாய்ப்
புன்மிசை துயில்கின்ற
சூட்சமுமேதோ!
அதைச் சொல்லவொண்ணாதோ! - அந்த
2. கோவலர்[2] அமிழ்தோ
வந்துமைக் கும்பிடுகிறார்; நல்ல
குவளைவிழியாள்
அன்னைமரி மடி
கொம்மை[3] யுண்ணுகிறீர்;
குறு நகையுங் கொள்ளுகிறீர் - அந்த
3. வாலுடு[4] விண்ணினின்று
கண்களை மருட்டுதே என்னமோ! உயர்
சாலப்
பொருள்களோடு ஞானிகள்
சந்திப்பதேனோ,-இந்த
ஜாலமுமேனோ[5]! -
அந்த
- தாமஸ் கவிராயர்
No comments:
Post a Comment