26 October 2021

விசுவாச பிரமாணம் - வானமும் பூமியும் படைத்தவராம்

வானமும் பூமியும் படைத்தவராம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

விசுவாச பிரமாணம்

 

 

                   வானமும் பூமியும் படைத்தவராம்

                        கடவுள் ஒருவர் இருக்கின்றார்

                        தந்தை மகன் தூய ஆவியராய்

                        ஒன்றாய் வாழ்வதை நம்புகின்றோம்

 

1.         பரிசுத்த ஆவியின் வல்லமையால்

            இறைமகன் நமக்காய் மனுவானார்

            கன்னி மரியிடம் பிறந்தவராம்

            இயேசுவை உறுதியாய் நம்புகிறோம்

 

2.         பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்

            சிலுவையில் மரித்து அடக்கப்பட்டார்

            மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்

            மரணத்தின் மீது வெற்றி கொண்டார்

 

3.         பரலோகம் வாழும் தந்தையிடம்

            அரியணை கொண்டு இருக்கின்றார்

            உலகம் முடியும் காலத்திலே

            நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்

 

4.         பரிசுத்த ஆவியை நம்புகிறோம்

            பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்

            பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

            பரிகார வாழ்வில் நிலைத்திடுவோம்

 

5.         திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்

            புனிதர்கள் உறவை நம்புகிறோம்

            உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை

            விசுவாசப் பொருளாய் நம்புகிறோம். ஆமென்.

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...