28 October 2021

என் மேய்ப்பர் கர்த்தரானவர்

என் மேய்ப்பர் கர்த்தரானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

ஞானப்பாட்டு: 109

Der Herr ist mein geteuer Hirt I Luther

IELC # 91

 

1.       என் மேய்ப்பர் கர்த்தரானவர்

            நன்றாகக் காத்து வந்தார்

            அனைத்தையும் என் ரட்சகர்

            குறைவில்லாமல் தந்தார்.

            அனைத்திலும் ருசிகர

            தெய்வீக வார்த்தையாகிய

            நல் மேய்ச்சல் எனக்குண்டு.

 

2.         ஜீவாற்றின் நல் கால்வாய்களை

            அவர் எனக்குக் காட்டி

            என் ஆத்துமத்தின் தாகத்தை

            அத்தால் நன்றாக ஆற்றி

            தாம் இயேசு என்னப்பட்டதில்

            அடியானை நற்பாதையில்

            நேரே நடத்துவாரே.

 

3.         ஓர் வேளை ஜோதியின்றியே

            நான் மரணக் கிலியின்

            இருண்ட பள்ளத் தாக்கிலே

            நடந்தும் அவதியின்

            பொல்லாப்புக்குப் பயப்படேன்;

            நீர் நீட்டுங்கோலைப் பற்றுவேன்

            அது வழியைக் காட்டும்.

 

4.         அடியேனுக்கோர் பந்தியைப்

            பகைஞர்க் கெதிராக

            வைத்தெண்ணெயால் என் சிரசை

            மகா கடாட்சமாக

            நீர் அபிஷேகஞ் செய்கிறீர்;

            அடியேனை நீர் மறவீர்.

            என் பாத்திரம் நிரம்பும்.

 

5.         என் ஜீவனுள்ள மட்டுக்கும்

            தெய்வன்பை நான் உணரும்

            படிக்கு என்னை நன்மையும்

            கடாட்சமுந் தொடரும்.

            கர்த்தாவின் வீட்டில் இங்கேயும்

            பிற்பாடங்கேயும் என்றைக்கும்

            நிலைத்துக் கொண்டிருப்பேன்.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...